முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரகசிய இடத்தில் வைத்து கைது.பல திடுக்கிடும் உண்மைகள்
வெளிவரலாம்.முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகியது தனிக்கதை.இராமநாதபுரம் மாவட்டம் தற்போதைய அ.ம.முக மாநில பொறுப்பாளர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முனியசாமி,மண்டபம் ஒன்றிய செயலாளரும் மூத்த அ.தி.மு.க நிர்வாகியுமான தங்கமரைக்காயர் ஆகிய இருவரையும் நேர்முகத் தேர்விற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருவரையும் அழைத்திருந்தார்.இதற்கிடையில் மருத்துவர் மணிகண்டன்,அவரது மனைவி மருத்துவர் வசந்தி தாயார் சசிகலாவிற்கு உறவினர் என்பதால் சசிகலாவின் பரிந்துரையின் பேரில் மணிகண்டனையும் அழைத்திருந்தனர்.மருத்துவர் என்பதாலும்,சசிகலாவின் உறவினர் என்பதாலும் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.சசிகலாவின் பரிந்துரையின் பேரில் அமைச்சருமானார்.இவர் அமைச்சர் பொறுப்பேற்றதும் கூடுதல் பொறுப்பாக அ.தி.மு.க மாவட்ட செயலாளரானார்.சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்,மாவட்ட செயலாளர் என மூன்று பதவிகள் இவருக்கு அதிகார பலத்தை கூட்டியது.தனது அதிகாரத்தை பயன்படுத்தி அ.தி.மு.க-வின் மூத்த முக்கிய நிர்வாகிகளை பின்னுக்கு தள்ளினார்.இராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை என்ற தலைக்கனம் தலைக்கேறியது.அப்போதைய மூத்த அ.இ.அ.தி.மு.க அமைச்சர் ஒருவரை மேடையில் வைத்தே அவமானப்படுத்தினார்.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற புதிய அமைச்சர் என்பதால் மணிகண்டனை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்.இதன் விளைவு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்குவதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேரத்தில் ஈடுபட்டார்.இதன் விளைவு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு அந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் கொண்டு சென்றதன் விளைவாக மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டார்.மணிகண்டனின் யோகம் ஓராண்டிற்க்குள் ஜெயலலிதா மரணமடைந்தார்.அதற்கடுத்து ஓ.பி.எஸ் முதல்வரானார்.அவரை தொடர்ந்து சசிகலா முதல்வராகும் தருவாயில் சிறை சென்றார்.சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் எடப்பாடி முதல்வராக நியமிக்கப்பட்டார்.எடப்பாடியின் தயவால் அனைத்து அமைச்சர்களும் ராஜபோக வாழ்க்கை வாழத் தொடங்கினர்.தனக்கு பதவி கிடைக்க காரணமாக இருந்த மனைவியை மறந்து,பிள்ளைகளை மறந்து தனக்கென தனி ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி கொண்டார்.அதன் விளைவு நடிகை சாந்தினி உட்பட பலரது தொடர்பில் இணைந்தார்.சாந்தினியுடன் குடும்பம் நடத்தி மூன்று அப்பாவி சிசுக்களை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.உளவுத்துறையை கையில் வைத்துக் கொண்டு இருந்த எடப்பாடி இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.இதனுடைய விளைவு வெளிமாநிலம்,மற்றும் வெளிநாடுகளில் தன்னுடைய முதலீடுகளை பெருக்கிக் கொண்டார்.தன்னுடைய உறவினர்கள் மூலம் அந்நிய முதலீடுகளை பதுக்கி வைத்திருந்ததும் எடப்பாடிக்கு தெரிந்து அதன் எதிரொலியாக மந்திரி மாஜி மந்திரியானார்.இராமநாதபுரம மாவட்டத்தில் நடந்த பெரிய டெண்டர்கள் முதல் சிறிய டெண்டர் வரை பல இலட்சங்கள் இவருக்கு கையூட்டு வழங்கப்பட்டது.இவருக்கு மேலும் சம்பாத்யத்தை வலுசேர்க்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் முதுகுளத்தூர் காங்கிரஸ்,திருவாடானை அ.தி.மு.க ஆதரவு பெற்ற முக்குலத்தோர் புலிப்படை,பரமக்குடி தனி அ.ம.மு.க முத்தையா ஆக நான்கு தொகுதிகளுக்கும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்.இதன் விளைவு பல இடங்களில் பாலம் உட்பட டெண்டர் விடப்பட்டு பாதியில் நிற்கிறது.இந்த நிலையில் இராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.க-வினர்,அ.தி.மு.க வேட்டியை கட்டினால் உருவுங்கள் என்று பேசினார்.இதற்கு அ.ம.மு.க நிறுவனர் டி.டி.வி தினகரன் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக்காரன் கட்டிய வேட்டியை உருவச்சொன்ன இவர் மனித டாக்டரா?இல்லை மாட்டு டாக்டரா?என விமர்சனம் செய்தார்.அதே கூட்டத்தில் இந்த தொகுதியில் நானே மீண்டும் எம்.எல்.ஏ ஆவேன்.தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரவே முடியாது.ஆனால் நான் ஒரு மருத்துவர் சொல்கிறேன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மூன்று மாதங்களில் இறந்து விடுவார்.மேலும் அவர் டோப்பா முடி வைத்துள்ளார்.ரத்தத்தில் அவருக்கு மர்ம நோய் உள்ளது அதனால் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது.ஸ்டாலினும் புதல்வராக முடியாது என்றார்.இவருடைய இந்த பேச்சு இராமநாதபுரம் மாவட்ட மக்களையே முகம் சுளிக்க வைத்தது.மாலையிடும் மக்கள் மண்ணெடுக்க அஞ்சார் என்பதற்கு ஏற்ப தேர்தலில் அ.தி.மு.க படு தோல்வியடைந்து தி.மு.க ஆட்சியமைத்தது.நடிகை சாந்தினியும் சமயம் பார்த்து இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.அதன் பேரில் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் யார் என்றே தெரியாது என நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி 9-ஆம் தேதி வரை கைது செய்ய வேண்டாம் என நிறுத்தி வைத்து பின்னர் நீதிமன்றமே அந்த மனுவை தள்ளுபடி செய்தது.அதன்பேரில் காவல்துறை தரப்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அதற்கடையில் மணிகண்டன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க காவல்துறை அனைத்து இடங்களிலும் உஷார்படுத்தப்பட்டது.நேற்று நள்ளிரவு பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து போலீசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.அ.இ.அ.தி.மு.க-வை பொறுத்தமட்டில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த காலக்கட்டத்தில் உறுப்பினர்கள் சிறு தவறு செய்தாலும் யாராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.ஆனால் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இந்த கட்சிக்கு நிர்வாகிகளாக வந்த பிறகு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துபவர்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியதற்காக 16-பேர் நீக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்திற்கு பல அவப்பெயர்களை ஏற்படுத்தி கொடுத்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஆதரவாக தற்போதைய நிர்வாகிகள் இருப்பது அவருக்கு பலம் பொருந்திய செல்வாக்குக் உள்ளது.அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் மணிகண்டன் பின்னால் இருக்கும் வரை ஒரு சாந்தினி அல்ல ஆயிரம் சாந்தினியின் புகார் கூட மணிகண்டனை ஆட்டவோ,அசைக்கவோ முடியாது.ஆட்சிதான் மாறியதே தவிர மணிகண்டன் போன்றோரது காட்சிகள் மாறாமல் உள்ளது.காவல்துறை உண்மையாகவும்,நேர்மையாகவும் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் சிவசங்கர் பாபா போன்று மேலும் பல மாஜி மந்திரி பாபாக்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *