தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து காப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை அந்தந்த மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் சாலையோரங்களில் வசிக்கும் அனாதைகள் மற்றும் மனநோயாளிகளின் பசியினை போக்குவதற்காக சமூகத்தில் அக்கறை கொண்ட பல அமைப்புக்களும், இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் நகரங்களில் தனியாக உலாவிக் கொண்டிருக்கும் நபர்களை கண்டு அவர்களின் பசியினை போக்குவதற்காக உணவுகள் மற்றும் குடிதண்ணீர் பாட்டில்களும் வழங்கிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக “சிறுதுளிகள்” என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் பூசேரி கிராமத்தைச் சேர்ந்த சிவில் இஞ்ஜினியர் பயின்ற தர்மராஜ் (25) கல்லூரியில் பயின்ற காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த ஏதாவது ஒரு உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என எண்ணிய அவர் 2018 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஆக்ஸ்போர்ட் தனியார் பொறியியல் கல்லூரியில் 2014 முதல் 2018 வரை உள்ள கால கட்டத்தில் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும்போதே மாணவ பருவத்திலேயே கல்லுாரியில் பயின்ற சகமாணவர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கியதுதான் “சிறுதுளிகள்” அறக்கட்டளையாகும் இதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கல்லூரியில் பயின்ற அனைத்து மாவட்டத்திலும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் கடந்த மே 28 ஆம் தேதி முதல் இன்று 31.05.2021 இன்று வரை தினமும் 150 பார்சல் சாப்பாடு தாயார் செய்து கீழக்கரை, திருஉத்திரகோசமங்கை, ராமநாதபுரம், திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் உலாவிக் கொண்டிருக்கும் வழி போக்கர்கள், ஆதரவற்ற அனாதைகள், முதியோர்கள் போன்றவர்களுக்கு தக்காளி சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் பிரியாணியுடன் முட்டை, போன்ற உணவு பொட்டலங்களுடன் குடிக்க தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வழங்கி வருகிறார் தர்மராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *