ராமநாதபுரம், பிப்.10:

கீழக்கரை 19வது வார்டில் தனிப்பட்ட காரணங்களால் முடக்கப்பட்ட பூங்கா
மீண்டும் அமைக்க நடவடிக்கை ஏற்படும். என வேட்பாளர் செய்யது அபுசாலிஹ் உறுதி அளித்துள்ளார்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது கீழக்கரை நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 110 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

வார்டு 19 ல் சுயேச்சையாக போட்டியிடும் செய்யது அபுசாலிஹ் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஆதரவு பெற்ற வேட்பாளராக இந்த தேர்தலில் நிற்கிறார்.
பி இ பட்ட படிப்பு படித்தவர் இளம் வயதில் சமூக ஆர்வலராகவும் வரலாற்று ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளார். 19 வது வார்டு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தேங்கியிருந்த குப்பை மேட்டை அகற்றி அப்பகுதி பொதுமக்கள் பயன்படும் வகையில் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்தார்.

சில தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பகுதியில் பூங்கா அமைக்க பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி அவர் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் பூங்கா பணிகளை செய்து வந்தார்.

பணி முடிவடையும் நேரத்தில் அப்பகுதியில் பூங்கா அமைக்க அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை என்று கூறி பலர் பிரச்சினையைக் கிளப்பினர் இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் பூங்காவில் இருந்த பேரிச்சை மரங்கள் உட்பட அனைத்தையும் தீயிட்டு எரித்தனர். இதனால் மேற்கொண்டு பூங்காவிற்கு பணிகளை அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை தற்போது அந்த பகுதி முழுவதும் மீண்டும் குப்பை மேடாகவும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது

19 வது வார்டு பகுதியில் மீனவர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கடற்கரை பகுதியில் கழிவு நீர் சேராமல் தடுக்க ஏற்பாடுகள் செய்ய உள்ளார் அவரது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிற்கு அருகிலேயே உறைகிணறு வசதி ஏற்படுத்தி கழிவு நீரை தேக்கினால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று
கழிவுகள் பூமிக்குள் செல்வதால் மண் வளமும் பெருகும் போது கழிவுநீர் கடலுக்கு செல்லாமல் பூமிக்குள் செல்வதால் கடல் மாசுபடாது என்ற சிந்தனை உடையவர். 19 வது வாட்டில் இவர் வெற்றி பெற்றவுடன் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறினார். மேலும் கீழக்கரை நகர் பகுதியில் வீடுகள் அனைத்தும் நெருக்கமாக இருப்பதால் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளது

பாதாள சாக்கடை திட்டம் அமைக்க போதுமான இட வசதி கிடையாது. கீழக்கரை பகுதி இயற்கையாகவே மண் வளம் அதிகம் உள்ளதால் இந்த உறைகிணறு திட்டத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாமல் கழிவு நீரை பூமிக்குள் செல்ல ஏற்பாடு செய்ய முடியும் என்று கூறினார்.

கையில் அதிகாரம் இல்லாத போதே மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இவருக்கு 19-வார்டு பொதுமக்கள் இந்த முறை அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தால் வரும் காலங்களில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கீழக்கரையை உண்மையாகவே மாற்றுவார் . 19வது வார்டில் செய்யது அபு சாலிஹ் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *