கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார்.இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இராமநாதபுர மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றினார்.கல்லூரியின் செயலாளர் காலித் புஹாரி கல்லூரிக் கொடியை ஏற்றினார்.

பின்னர் மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது.அத்துடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து 100,200,400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள்,சாகசங்கள், யோகாசனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தோனேசியா, நேபாளம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக மாணவியர் பேரவையின் விளையாட்டுச் செயலர் முஜாஹித் ஜசீரா நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான்,கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநர் இர்ஃபான் அஹமது, மற்றும் பல்வேறு துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்:சீனி இபுராகிம். ஒளிப்பதிவாளர்: முஹம்மது நிசார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *