பெரியபட்டினம்,மே.29:-

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை வெளிமாநில வேலையாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதன் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் விவரங்கள் அந்தந்த நகராட்சி,பேரூராட்சி, மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக சேகரிக்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக பெரியப்பட்டினம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பாக வெளி மாநிலங்களிலிருந்து ஊராட்சி பகுதிகளில் வேலை செய்யும் நபர்களை அழைத்து சில அறிவுறுத்தல்களும் அவர்களின் குறைகளும் கேட்டறியப்பட்டது.
ஊரின் பாதுகாப்பும் உங்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம்.உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகி தெரிவித்துக் கொள்ளவும்.மேலும் உங்களுடைய நபர்கள் யாரேனும் சமூக குற்றங்கள்,திருட்டு மற்றும் வேறு குற்றங்களை செய்தால் உடனே அதனை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.அதைப்போல் யாரேனும் உங்களை குற்றம் செய்வதற்கு தூண்டினாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ உடனே பஞ்சாயத்து நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.அதைப்போல் புதிதாக யாரேனும் உங்களோடு வேலையில் சேர்ந்தால் உடனே அவர்களின் தகவல்களை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.போன்ற அறிவுறுத்தல்கள் சொல்லப்பட்டது.இந்த நிகழ்வில் முதலில் 15 நபர்களிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டது.இந்த அமர்வுக்கு Al Farah Construction, இரண்டு Hollow blockல் வேலைச் செய்யும் நபர்கள்,இரண்டு கூர்காக்கள் போன்ற நபர்களிடம் வேலை செய்யும் நபர்களின் தகவல்கள் பெறப்பட்டது.இதைப்போல் தகவல் கொடுக்கமால் யாரவது  ஊரில்  வேலை செய்தால் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு உடனே தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு பெரியபட்டினம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான்,பஞ்சாயத்து துணைத்தலைவர் புரோஸ் கான் மற்றும் ஊராட்சி செயலாளர் ஜலால்,கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *