கீழக்கரை,மார்ச்.30:-
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்றத் தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர்களை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் சந்தித்து நகருக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி குறைகளை களைந்திட வலியுறுத்தினார்.
நகராட்சி சேர்மன் அவர்கள் பதவியேற்ற முதல் நாளே ஊரில் உள்ள பிரதான கோரிக்கைகளை வைத்தோம்.அதில் முக்கியமாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும், வெறிபிடித்த நிலையிலும் உள்ள நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் ஏனென்றால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நமது ஊரில் ஒரு சிறுவர் இறந்துள்ளார்.மேலும் பல நபர்களை நாய்கள் கடித்து இராமநாதபுரம் மருத்துவமனையிலும் மதுரையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இப்படியாக இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்லி உள்ளோம் ஆனால் இன்று வரை அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
இன்று காலை நகராட்சி ஆணையர் அவர்களை சந்தித்து அதிக அளவு வெறிபிடித்த நிலையிலும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் நாய்கள் சுற்றித் திரிகிறது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் முன்பு அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படும் என்று வலியுறுத்தினோம்.
10 நாட்களுக்குள் இதனை நான் செய்து தருகிறேன் என்று நகராட்சி ஆணையர் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்குறுதி அளித்து உள்ளார்கள்.
நகராட்சி உள் வேளையில் அதிகப்படியான பணம் வசூலிக்கிறார்கள் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் இதைச் செய்பவர்களும் நகராட்சி ஆணையர் அவர்களும் பார்வையிட்டு முறைப்படுத்த வேண்டும் ஆட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளதால் அதை அதிகப்படுத்த வேண்டும் என்றும்,அதிலுள்ள வண்டிகள் பழுதடைந்து அப்படியே கிடப்பில் உள்ளன அதை அனைத்தையும் வேலை பார்த்து அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் 10-வார்டு களில் அதிக அளவு எங்கே கழிவுநீர் ஓடுகிறதோ அனைத்தையும் தூர்வாரி குறையாக உயர்த்தி கட்டி மூடிகள் போட்டு சரி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.
சேர்மன் அவர்களிடம் கொடுத்து இப்போதுவரை எந்த தீர்வும் இல்லாத காரணத்தால் இனியும் காலதாமதம் ஏற்பட்டால் விடுதலை சிறுத்தைகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்படும் என்றும் நேரடியாக கூறினோம்.

மேலும் கீழக்கரையில் நகர் திராவிட முன்னேற்றக் கழகம் திட்டங்களாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கீழக்கரை நகருக்கு  தரமான நவீன வசதிகள் கொண்டபல் நோக்கு மருத்துவமனை அமைத்து தருதல்.
2.மகளிருக்கு புதிய பல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் பஸ் மூலம் சொந்தக் கட்டிடத்தில் அமைத்துத் தருதல்!
3.கீழக்கரை நகரில் அரசு சார்பாக நூலகம் அமைத்து தருதல்!
4.இளைஞர்களுக்கு அதி நவீன விளையாட்டு மைதானம் அமைத்து தருதல்!
5.கீழக்கரை நகராட்சி சார்பாக அரசு பள்ளிக் கூடம் அமைத்து தருதல்!
6.கீழக்கரை சுகாதார நலனை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடைத் திட்டம் அமைத்து தருதல்!
7.நகரில் விரிவடைந்த பகுதிகளில் உடனடியாக   தெருவிளக்குகள் அமைத்து தருதல்!
8.கீழக்கரை மின் கட்டணம் செலுத்தும் வசதியை நகருக்கு கொண்டு வருதல்!
திராவிட முன்னேற்ற கழக கீழக்கரை நகர் வெற்றிபெற்ற சேர்மன் அவர்கள்  மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து உள்ளீர்கள் கீழக்கரை பொது மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு  திட்டமாக நீங்கள் ஊருக்கு கொண்டு வரவேண்டும்.முதலில் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இந்த சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் கழிவுநீர் வாகனங்களுக்கும் வார்டு ரீதியாக போகும் குப்பை எடுக்கும் இருபத்தொரு பேட்டரி  வண்டிகளுக்கும் உட்பட பல வருடங்கள் வண்டிகள் ஓடவில்லை   அதற்கு கணக்குவழக்குகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.அ.தி.மு.க ஆட்சியில் அரசு கீழக்கரை வளர்ச்சி திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது ஆனால் கீழக்கரையில் முறையான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை இதையெல்லாம் இப்போது உள்ள கழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.வேலைகள் அனைத்திற்குமே மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் அதனால் முறையாக அலுவலர்கள் வேலை செய்யும் ஊழியர்கள் மக்களுக்கு உரிய வேலையை முறையாக லஞ்சம் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சார்பாக வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *