இராமநாதபுரம்,ஜன.17:-

சமத்துவ பொங்கல் கொண்டாடிய பா.ம.க-வினர் நிகழ்ச்சியில் வாழும் எம்ஜிஆர் கலந்து கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லட்சுமிபுரம் பகுதியில் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமையில் மாவட்ட தலைவர் ஜீவா
கீழக்கரை நகர செயலாளர் செயலாளர் லோகநாதன் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்.ஜி.ஆர் அணி வாழும் எம்.ஜி.ஆர் வல்லரசு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு உரையின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை 2026 இல் முதலமைச்சராக பதவி ஏற்க எம்ஜிஆர் தொண்டர் படை கடுமையாக உழைக்கும் அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவோம். எம்.ஜி.ஆர் தொண்டர் படை அமைப்பினர் அனைவரும் தாய், தந்தையற்ற அனாதைகளான இருந்து வருகிறோம்.எங்களுக்கு அரசியல் ஆசானாக அன்புமணி ராமதாஸ் அவர்களை தலைவராக ஏற்று செயல்படுவோம் என சூளுரைத்தார்.

இக்கூட்டத்திற்கு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் கோவை குமார்,விருதுநகர் மாவட்ட பா.ம.க செயலாளர் டேனியல்,எம்.ஜி.ஆர் அணி மாநில பொருளாளர் சாரதா,
சிறுபான்மை பிரிவு செயலாளர்
பேராசிரியை ஹைதர் ஜஹான்,
எம்.ஜி.ஆர் அணி அரசியல் ஆலோசகர் அமீர் ஹம்சா,பா.ம.க மாவட்ட துணைச்செயலாளர் ராசிக்,மாவட்ட பொருளாளர் ஆயிஷா,மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆடிட்டர் சதாம் ராஜா,பசுமை தாயகம் மாவட்ட அமைப்பு செயலாளர் திருஞானம்,மண்டபம் ஒன்றிய செயலாளர் பனைக்குளம் ராவுத்தர் கனி,கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து,ஒன்றிய செயலாளர் இருளாண்டி,வாணி ஒன்றிய செயலாளர் அற்புதராஜ்,கடலாடி ஒன்றிய துணைத் தலைவர் முனியசாமி,உட்பட ஏராளமான பொதுமக்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.அதன்பின்பு நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed