ராமநாதபுரம், ஜன.14-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கவர்னர் ரவி மற்றும் மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டியா ஆகியோர் முன்னிலையில் ரூபாய் 4 ஆயிரத்து 80 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed