வக்பு சொத்துக்கள் மீட்பு கூட்டமைப்பு என்கின்ற பெயரில் 13-12-2021 அன்று முதல் தொடங்கப்பட்டு அதன் தலைமை பொறுப்பாளர்கள் எம் ஐ எம். கட்சி நிறுவன தலைவர் செங்கை ஷர்புதீன் தலைவர் . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் . காயல் அப்பாஸ் தலைமை ஒருங்கினைப்பாளர் . அல் முஸ்லிம் லீக் கட்சி நிறுவன தலைவர் எஸ். ஹீராலால் ஒருங்கினைப்பாளர் . ஐக்கிய தேசிய மக்கள் கட்சி நிறுவன தலைவர் அதிரை இபுறாஹிம் ஒருங்கினைப்பாளர் . தமிழக சமத்துவ ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் அறதாங்கி பாவா ஒருங்கினைப்பாளர்.ஆகிய ஐந்து பேர் தலைமையில் இக்கூட்டமைப்பு செயல் படும் என்று தெரிவித்துள்ளார்கள் .இது குறித்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை
முறையாக நிர்வாகம் செய்தால் தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர்கள் கூட ஏழையாக இருக்க மாட்டார்கள் வெள்ளிக்கிழமை அன்று பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் யாரும் யாசகம் கேட்டு கையேந்த மாட்டார்கள் என்பது குறிப்பிட தக்கது .
வக்பு வாரியத்திற்கு சொந்தமான
பல கோடி சொத்துக்கள் வக்பு வாரிய அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன ? தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துக்களை சட்டரீதியாக அந்த நிலங்களை கையகப்படுத்தி சம்பந்த பட்ட துறையிடம் ஒப்படைப்பது தான் வக்பு சொத்துக்கள் மீட்பு கூட்டமைப்பின் நோக்கமாகும் .
மீட்டு எடுக்கப்படுகின்ற வக்பு சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானங்களில் இஸ்லாமிய ஏழை மாணவ மாணவிகளின் கல்விச் செலவு மற்றும் ஏழை பெண்களின் திருமண நிதி உதவி மேலும் இஸ்லாமிய சமுதாயம் முன்னேற்றத்திற்காக செலவிட வேண்டும் என வக்பு சொத்துக்கள் மீட்பு கூட்டமைப்பு வலியுறுத்துகிறது
தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து தனிநபர்கள் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளது என்பது வக்பு துறைக்கும் தெரியும் ? ஆனால் வக்பு வாரியம் சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கதக்கது.
வக்பு சொத்துக்களை ஆக்கிரமைப்பு செய்த நபர்களையும் இதில் சம்பந்த பட்ட அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை வக்பு சொத்துக்கள் மீட்பு கூட்டமைப்பு சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்கள்.