ராமநாதபுரம் நவ:29 ராமநாதபுரம் மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் 29.11.2021 இன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பணிமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது 2020-21 ஆம் ஆண்டின் பயிர் இழப்பீடுக்கான காப்பீட்டு தொகையை இதுநாள்வரைக்கும் வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி கூறுகையில் எங்களது தலைவர் ஜான் பாண்டியன் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் திருமதி.பிரிசில்லா பாண்டியன் அவர்களின் உத்தரவின்பேரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றார்.மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழையாலும், பெரும்புயல் காற்றாலும், மொத்த விவசாயமும் அழிந்து போன நிலையில் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு தொகையை நம்பி காத்திருக்கும் நிலையில் இதுவரையிலும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் பயிர் காப்பீடு தொகை கிடைக்கப்பெறவில்லை எனவே விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு இன்று அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தாங்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்து பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீடு தொகை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
உடன் ஒன்றிய தலைவர் மாரிதாஸ்,தேவிபட்டினம் பொறியாளர் கேசவன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஆறுமுகக்கனி, திருப்புல்லாணி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ்,மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேசன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சு.ப.சுந்தரபாண்டியன் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் முடிவுற்ற நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர்.
