இராமநாதபுரம்,நவ.28:-

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி தலைமையில் முன் மாதிரி கிராமத் திட்ட மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.ஊராட்சியின் அடிப்படைத் தேவைகள் குறித்து 46 மனுக்கள் பெறப்பட்டது.இம்மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எம்.பி உறுதியளித்தார்.முன்னதாக நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்க வருகை தந்த இராமநாதபுரம் கூடுதல் ஆட்சியரும்,திட்ட இயக்குநருமான கே.ஜே.பிரவீன்குமார் அவர்களுக்கு பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து கூடுதல் ஆட்சியரும்,திட்ட இயக்குநருமான கே.ஜே.பிரவீன்குமார் பேசும் போது:-

இராமநாதபுரம் மாவட்டத்திலேயே பெரியபட்டினம் ஊராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளில் முதன்மை பெற்று விளங்குகிறது.அதிக அளவில் நிதி ஒதுக்கப் பெற்று வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக விளங்கி வருகிறது.ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து குறை மற்றும் நிறைகளை அவ்வப்போது உடனுக்குடன் சரிசெய்து வரும் ஊராட்சி நிர்வாகத்திற்க்கும்,ஊராட்சி மன்றத் தலைவருக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர்ஜான் பீவி கூறுகையில்:-

பெரியபட்டினம் ஊராட்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி திட்ட பணிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக விளங்க உறுதுணையாக இருக்கும் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் கே.ஜே.பிரவீன்குமார் அவர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பிலும்,பொதுமக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *