ராமநாதபுரம், நவ.24-

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க., நிர்வாகிகள் கூட்டம் தமுமுக மாவட்ட செயலளாலர் வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமையில் தொண்டி பேரூர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மண்டலம் ஜெய்னுல் ஆப்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் சாதிக்பாட்சா பேசும்போது,
எதிர்வரும் டிசம்பர் 6 இந்தியாவின் சமயசார்பின்மை சமத்துவம், சமநீதி ,சமூகநீதி ,
அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் காப்பதற்கு சூளுரை மேற்கொள்ள வேண்டிய மற்றும் அனுசரிக்க பட உள்ள நாளாக டிசம்பர் 6 உள்ளது. இன்னொரு சுதந்திர போராட்டமாய் ,எழுச்சியோடு நடைபெறவுள்ள டிசம்பர்-6 விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து முஸ்லிம்கள் மட்டுமின்றி நமது அன்பான தொப்புள்கொடி உறவுகளை பங்கேற்க செய்வோம்.மண்ணையும் மனிதநேயத்தையும் சிதையாமல் காக்க ,புதையாமல் மீட்க நடத்தப்படும் இந்த அர்த்தம் செறிந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக வீறு கொண்டு பணியாற்ற வேண்டும், என, பேசினார்.
மேலும் தமுமுக .மமக உறுப்பினர் சேர்க்கை முகாம் கிளைகள் தோறும் நடத்துவது என்றும்,
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மமக சார்பாக அதிகமான இடங்களில் போட்டியிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திருவாடனையை சேர்ந்த வருசை முகம்மது என்பவரின் வீடு மழையின் காரணமாக
இடிந்துவிட்டது. அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10ஆயிரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் பட்டாணிமீரான், வரவேற்றார். மாவட்ட செயலாளர் அன்சாரி ஆலிம் திருக்குர் ஆன் விளக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட மமக செயலாளர் ஜாகிர், மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் முகமது அலி, ஜாவித் அஸ்ஸாம், சாகுல் ஹமீது, மமக துணை செயலாளர் உபையதுல்லா, இளைஞர் அணி செயலாளர் அபுதாகிர், ஒன்றிய நிர்வாகிகள் பீர் முகமது, தொண்டிராஜ், பேரூர் நிர்வாகிகள் பரகத் அலி, நவ்வர் மைதீன்
,ஆர்.எஸ்.மங்களம் பேருர் தலைவர் செய்யது, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தொண்டி பேரூர் தலைவர் காதர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *