இராமநாதபுரம்,நவ.22:-
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் டாக்டர்.பெ.ஜான் பாண்டியன் அவர்கள் ஆணைக்கிணங்க,மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜா.பிரிசில்லா பாண்டியன் தலைமையில் இராமநாதபுரம் குமரய்யா கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.இந்நேர்காணலின் போது இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா திருப்பாலைக்குடி ஊராட்சியை சேர்ந்த,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த K.முனியசாமி என்பவர் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் பொறுப்பு வேண்டுமென நேர்காணலில் விருப்பமனு அளித்திருந்தார்.அவரது விருப்ப மனுவானது தலைமையின் பார்வைக்கு வைக்கப்பட்டது.அதனடிப்படைப்படையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் டாக்டர்.பெ.ஜான்பாண்டியன் அவர்களின் ஒப்புதலோடு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர்.ஜா.பிரிசில்லா பாண்டியன் மாவட்ட இணைச் செயலாளராக பணியாற்றி வந்த K.முனியசாமி என்பவரை இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக இன்று (22.11.2021) நியமித்தார்.கட்சியின் கோட்பாடுகளுக்குட்பட்ட கொள்கையுடன் கட்சியின் அனைத்து நிர்வாகிகளோடும் இணைந்து திறம்பட கட்சிப் பணியாற்றிட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed