இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றி கால்வாய் அமைத்து தர புதுமடம் தெற்கு நற்பணி மன்ற தலைவர் சீனி முஹைதீன், ஒருங்கிணைப்பாளர் சீனி ஆவுல் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுமடத்தில் சிறிய அளவு மழை பெய்தால் கூட ரோடு களிலும் வீதிகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதற்கு அரசாங்கமும் ஊராட்சியும் தான் இதற்கு நிரந்தர தீர்வுகான வேண்டும் எனவே மழைக்காலத்தில் தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை உடனடியாக மோட்டார் வைத்து அதை அப்புறப்படுத்த வேண்டும் அதை அப்புறப்படுத்த வில்லை என்றால் ஒரு சில நாள்களில் அந்த தண்ணீர் துர்நாற்றம் எடுத்துவிடுகிறது

அதனால் கொசுக்கள் விஷப்பூச்சிகள் உருவாவதற்கு காரணமாகிவிடுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைக்கு ஊராட்சி தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.. எனவே அந்த தண்ணீரை உடனடியாக ஊராட்சி அகற்ற வேண்டும் ஊராட்சி இதற்கு சரியான முறையில் தீர்வு காணாவிட்டால் முதலமைச்சர் தனிப்பிரிவு க்கும் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கும் புதுமடம் தெற்கு நற்பணி மன்றம் மூலம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்…

இந்த புகைப்படத்தின் இடம் K.S அப்பா வீட்டு சந்து லாவீர் வீட்டு சந்து இதுபோன்று பல இடங்களில்…

வெளியிடுவோர்
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 🔥🔥🔥🔥👇🏻👇🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *