கீழக்கரை,நவ.03:-
திரிபுராவில் விஸ்வ இந்து பரிசத் திட்டமிட்டு கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது அயூப்கான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர செங்கோட்டை ஃபைசல் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.அவர் பேசியதாவது:- பாஜக அரசு இந்தியாவில் பொறுப்பேற்றதில் இருந்து சிறுபான்மையினராக இருக்கக் கூடிய முஸ்லிம்கள் அதிகம் தாக்கப்படுவது ஒன்றாகிவிட்டது  முஸ்லிம்கள் படுகொலைகள் செய்யப்படுவது வழக்கமாய் ஒன்றாகிவிட்டது.பிரதமர் மோடி சர்வாதிகார முறையில் தேசத்தை கொண்டுசெல்கிறார் இந்தியாவில் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு பேரணி என்ற முறையில் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிக்குள் திட்டமிட்டு சென்று முஸ்லிம்களை தாக்கி படுகொலை செய்தும் பள்ளிவாசல்கள் கடைகளை அடித்து நொறுக்கியும்   முஸ்லிமகள் வசிக்கும் பகுதிக்குள் திட்டமிட்டு சென்று,முஸ்லிம்கள் மத வழிபாட்டுந் தலங்களான பள்ளிவாசல்கலள தாக்கியும்  சேதப்படுத்தியுள்ளனர்.பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் இத்தகைய வன்முறை செயல்கள் நமது தேசம் உலக அளவில் தலைகுனியும் நிலை ஏற்படுத்தியுள்ளது கொரணா காலகட்டத்தில் கூட ஆளும் பாஜக அரசினர் மக்களுக்கு அதிக அளவில் உதவிகளை செய்யவில்லை பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளனஅவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய அரசு திரிபுரா மாநிலத்தில் இத்தகைய பாஜ அரசினர் மக்களுக்கு அதிக அளவு உதவிகளை செய்தது இல்லை, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மளமளவென் உயர்ந்து உள்ளது அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய அரசு.இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.திரிபுரா மாநிலத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அதே வேளையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்ஆரிப்கான்,மாவட்ட துணைத்தலைவர் பசீர்,மாவட்ட துணை செயலாளர்கள் ஹக் தஸ்தக்கீர்,மன்சூர்,சுல்த்தான் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *