இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பஞ்சாயத்தில் இலந்தை கூட்டம் கிராமத்தில் என்.எஸ்.இ பவுன்டேசன் நிதியுதவியுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியத்தில் கிராமாலயா தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து இராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் பழுதடைந்தும், பயன்பாட்டில் இல்லாத 1903 தனிநபர் இல்ல கழிப்பறைகள்,40 பள்ளி கழிப்பறைகள் 8 மகளிர் சுகாதார வளாகங்கள் 10 அங்கன்வாடி கழிப்பறைகள் மராமத்து செய்யபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் 25 ஊராட்சிகளிலும் கழிப்பறை பயன்பாடுகள்,பாதுகாப்பான முறையில் குடிநீரை கையாளுதல், தன் சுத்தம், திட மற்றும் திரவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றுதல்,மாதவிடாய் மேலாண்மை,ஊட்டச்சத்து குறித்தும் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இத்திட்டத்தில் இந்ந வருடம் 10 முன்மாதிரி கிராமங்களை தேர்தெடுத்து இக்கிராமங்களில் பழுதடைந்த மற்றும் பயன்படுத்தமுடியாத கழிப்பறைகள் கண்டறியப்பட்டு அனைத்து கழிப்பறைகளும் மராமத்து செய்து கொடுத்து முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்டுள்ளது.இதன் அடிப்படையில் முதல் தொகுப்பாக 6 கிராமங்களை அறிவிக்க திட்டமிடபட்டுள்ளது.கிராம மக்கள் பங்கேற்புடன் முழு சுகாதார கிராமமாக இருப்பதை அறிவிக்கும் விதமாக குடிநீர் சுகாதார நலக்குழு மற்றும் ஊராட்சி மன்றம் இணைந்து நீடித்த நிலைத்த சுகாதரமான முன்மாதிரி கிராமமாக அறிவிக்கும் பெயர் பலகை திறந்து வைக்க முடிவு செய்துள்ளது.இன்றைய கூட்டமானது அ.பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தலைமையில்,மண்டல வளர்ச்சி அலுவலர் விஜயக்குமார், பல்லூயிர் மேலாண்மை குழு தலைவர் ரைசுதீன் ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரிக் ஜஹான் ரைசுதீன் துணை தலைவர் விஜயா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராமாலாயா திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.பாப்பு, சித்தார் கோட்டை குடிநீர் சுகாதார நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமாலாய தொழிலுட்ப அலுவலர்கள் பவுல் அந்தோணி,குரு ஈஸ்வர்,சுகாதார நலக் கல்வியாளர்கள் அந்தோணி ஜெயபால்,ராஜ்குமார்,வேல் முருகன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *