இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு.தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஒன்றிய அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு TNPSA திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் நாகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.OHT ஒன்றிய பணியாளர் சங்க ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.TNPSA திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் மா.ஜெயபால் முன்னிலை வகித்தார்.TNPSA மாவட்டத் தலைவர் கா.ரவி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 205 மூலம் பணியாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட ரூ 850  குறைவான ஊதியம் பெற உள்ளது. எனவே இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும்.மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மாத ஊதியம் பெறும் வகையில் ஊதியத்தை நிர்ணயித்து இயக்குநகரத்திலிருந்து தனி சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும். இவ்வகை பணியாளர்களின் 30 ஆண்டுகால பணிகாலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம்,ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கிட வேண்டும்.கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் வழங்கும்போது வேண்டுமென்றே இழுத்தடித்து வருகின்றனர்.எனவே ஊராட்சி செயலர்களின் நீண்ட நெடிய நாள் கோரிக்கையான மாதாந்திர ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கிட வேண்டும்.அல்லது ஊராட்சி ஒன்றியம் மூலம் பெறும் வகையிலாவது தற்காலிக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.3 ஆண்டுகள் பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு வட்டாரத்திற்குள் பணியிட மாறுதல் செய்வதுடன் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பதிவுறு எழுத்தருக்கு உண்டான அனைத்து அரசின் சலுகைகளையும் உடனே வழங்கிட வேண்டும்.ஊராட்சி செயலர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஆண்டுகாலமாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வட்டார/மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாநில முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊதியம் ரூ.20.000/ வழங்குவதுடன் இவர்களின் குடும்ப சூழல்,பணிக்காலத்தை கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களில் இளநிலை உதவியாளர் நிலையில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி பணியமர்த்திட வேண்டும்.என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.TNPSA திருப்புல்லாணி ஒன்றிய பொருளாளர் நளினாதேவி நன்றியுரையாற்றினார்.ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை  TNPSA திருப்புல்லாணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்அ.சேகு ஜலாலுதீன் செய்திருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *