இராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்வராக பணியில் சேர்ந்த பால் கிரேஸ் சேர்ந்ததிலிருந்து கல்லூரியில் சாதிய பாகுபாடுகளை பின்பற்றி மாணவர்களையும் பேராசிரியர்களையும் சாதியை ரீதியாகவே நடத்தி வந்துள்ளார் என கூறப்படுகிறது.மேலும் அங்கு கல்லூரி அலுவல்கள் சார்பாக பழைய மாணவர்களோ,அல்லது தற்போதைய மாணவர்களோ முதல்வரை சந்திக்கும் பட்சத்தில் நேரடியாகவே நீ இந்த சாதியை சார்ந்தவன் அதனால் உனக்கு இங்கு சான்றிதழ்கள் ஏதும் தர இயலாது நேரடியாக பல்கலைக்கழகத்தின் இயக்குனரை அணுக கூறியுள்ளார்.இதனால் அலைகழிப்புக்குள்ளானவர்கள் தரப்பில் இராமநாதபுரம் பகுதிகளில் கல்லூரி முதல்வரை கண்டித்து பெரிய அளவில் வால் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது.இக்கல்லூரியில் 752 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய உள்கட்டமைப்புகள் இருந்தபோதும் இந்த கல்லூரியில் 580 மாணவர்கள் மட்டுமே பயில இயலும் என ஒப்புதல் பெற்று அதற்கான பணியினையும் துவங்கியிருக்கிறார்.இதனை கண்டித்து பேராசிரியர்கள் 752 மாணவர்கள் படிக்கின்ற இடத்தில் 580 மாணவர்கள் படிக்க வைத்தால் 200 மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று மாணவர் சேர்க்கையை நிறுத்தி இருக்கிறார்கள்.தொடர்ச்சியாக மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் பொய்யாக காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கிறார் என பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் குறித்து கடந்த ஓராண்டாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியும் இவரை இக்கல்லூரியில் இருந்து மாறுதல் செய்த கல்லூரி இயக்குனர் அலுவலக உத்தரவை நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்று மீண்டும் இக்கல்லூரியில் முதல்வராக பணியில் அமர்ந்துள்ளார்.இக்கல்லூரியில் ஏழை,எளிய மாணவர்கள் மற்றும் பட்டியலின மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெறும் இதனை தடுக்கும் விதமாக கல்லூரி முதல்வரின் நடவடிக்கை உள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கல்லூரி சிற்றுண்டி சாலையில் இரட்டை டம்ளர் முறையை வலியுறுத்தும் விதமாக கல்லூரி முதல்வருக்கு தனியாக ஒரு டம்ளர் கொடுத்துவிட்டு அதில் டீ முதலானவை வாங்கி சாப்பிடுவார் இந்தக் கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக சிற்றுண்டி சாலை நடத்திவரும் பொன்துரை இரட்டை டம்ளர் முறை ஒத்துழைக்காததால் அவரை பணி நீக்கம் செய்துள்ளார். அவருக்கு உண்டான ஊதிய தொகையையும் நிறுத்தி வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.ஆசிரியர்களை பொருத்தவரையில் அவர்களை ஒருமையில் அழைப்பது, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவது,என்று அராஜகமான முறையில் நடந்துகொள்கிறார் எனக்கூறி கடந்த சில தினங்களாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் விளைவாக கல்லூரி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் விசாரணை மேற்கொண்டார். 
விசாரணை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது:-
விசாரணை நடைபெற்றது.இதன் முடிவை எங்களுடைய மேலதிகாரிகளுக்கு தெரிவிப்போம் அதன் பிறகே நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார். பேராசிரியர்கள் வருகிற செவ்வாய்க்கிழமை வரை உங்கள் நடவடிக்கைக்காக பொறுத்திருப்போம் அதன்பின்பு குடும்பமாக வந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.எங்கே போய் முடியுமோ?இந்த இரட்டை டம்ளர் முறை என்பது துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *