இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி சாத்தான்குளத்தில் கூடுதல் அரசு அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.திருமதி.M.சித்ராமருது அவர்கள் தலைமையேற்று கட்டிடத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் திரு.RG.மருதுபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார்.மேலும் இந்நிகழ்ச்சியல் சாத்தான்குளம் கிராம தலைவர்கள் மு.பெரியசாமி, மு.மலைராஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் க.அண்ணாமலை,மு.கிருஷ்ணன்,வெ.மூர்த்தி,க.பாக்கியராஜ் , மு.லிங்கசாமி,த.பாண்டி, மு.சசிக்குமார், தென்னம்பிள்ளைவலசை A. ராஜா, M. சந்திரசேகர், சங்கந்தியான்வலசை களஞ்சியம் ஊராட்சிமன்ற துணை தலைவர் வினோத்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதி,சாமிநாதன், R.இராஜேந்திரன்,நாகசௌந்திரம், ஹேமலதா,நர்மதா,கண்ணன் மற்றும் பரமகுரு,சரவணன்,பாரத், கார்த்திக்,ஞானக்குமார்,விக்கி, பிரசாத்,சாமிநாதன்,திருசெல்வம், கோபி,கோபிகிருஷ்ணன், ஊர்பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்ற குழுக்கள் பெரும் திராளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஊராட்சிமன்ற தலைவர் அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.மேலும் கட்டிட வளாகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் பல்வேறு மரக்கன்றுகளை நட்டார்.நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தமைக்கு பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவரை மனதார பாராட்டினர் . இந்நிகழ்ச்சியை ஊராட்சி செயலர் N.நாகேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *