தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் 2020-21 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ கல்வி முறையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் தேசிய அளவில் ஆறாவது இடத்தை பிடித்து சாதனை மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பள்ளியின் முதல்வர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வரவேற்புரையில் அவர் பேசியதாவது:-

இக்கட்டான கடந்த வருடம் சூழ்நிலையில் பத்தாவது பன்னிரண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் மாணவ-மாணவிகள்.இதற்கு காரணம் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தினர் தான் காரணம் என்றார்.பள்ளியின் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் தலைமையுரையாற்றினார்.தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆக்கிஃப் (495/500),மாணவி ஆயிஷா (495/500) மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவிகள் இந்துஜா(489/500),ஹர்சினி(488/500),சித்தார்த்தன்(487/500) மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.மேற்குறிப்பிட்ட மாணவ,மாணவிகளுக்கு தேவிபட்டிணம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளி சார்பில் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்தப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து தற்போது மேல்படிப்பிற்கு செல்வதற்கு முன் எட்டு வருடமாக பயிற்சி பெற்று கடின பயிற்சியின் மூலம் கபாடி போட்டியில் தமிழ்நாடு அணியில் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வாங்கிய தேவிபட்டிணத்தைச் சேர்ந்த பரமசிவன்,என்கிற மாணவருக்கும் பள்ளியின் சார்பாக பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேசிய அளவில் ஆறாவது இடத்தையும் மற்றும்,மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கல்விக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கவும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், பள்ளி செயலாளர் ஜீவலதா,பள்ளி முதல்வர் முத்துக்குமார்,அகாடமி  பிரின்சிபால் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *