இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகம் பகுதியில் உள்ள அயன் பெரியனேந்தல் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் 50-மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன.அதே கிராமத்தில் உள்ள மாற்று சமுதாயத்தினர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வரும் இடத்தில் பால்வாடி கட்டிடம் அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவேந்திர குல வேளாளர் மக்கள் தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இடத்தில் கோவில் கட்டுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அயன் பெரியனேந்தல் கிராமத்தில் இரு தரப்பிருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.இதை அறிந்த நயினார்கோவில் அரசு அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் அக்கிராமத்திற்கு சென்று பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்து இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *