தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் சென்றடையும் வகையில் பணியாற்றுவேன் என புதிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன் பேட்டி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் கரூர் மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த சு.ஜெகவீரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டார்.கடந்த (06.08.2021) அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்ற சு.ஜெகவீரபாண்டியன் மரியாதை நிமித்தமாக அமைச்சர் கீதாஜீவன்,மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.2010-ஆம் ஆண்டு ஏ.பி.ஆர்.ஓ-வாக பணியில் சேர்ந்த இவர் 2015-ஆம் ஆண்டு பி.ஆர்.ஓ-வாக பதவி உயர்வு பெற்றார்.கடந்த 2016-ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் விருதுநகர்,திருநெல்வேலி,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பி.ஆர்.ஓ-வாக மீண்டும் பணியமர்த்தப்பட்ட சு.ஜெகவீரபாண்டியன் செய்தியாளர்களிடம்கூறுகையில்:-
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சென்றடையும் வகையில் அமைச்சர்கள்,கலெக்டர் ஆகியோரின் ஆலோசனைப்படி மக்கள் நலத்திட்டங்கள் சார்ந்த செய்திகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் முனைப்புடன் பணியாற்றுவேன் என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *