புதுச்சேரில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த பாஜக நிர்வாகியின் கொடூர செயலுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் கூலித் தொழிலாளியான சதீஷ்குமாரை பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பா.ஜ.க வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜ மவுரியா உள்ளிட்ட 7 பேர் சதீஷ்குமாரிடம் யார், எந்த ஊர் என்று விசாரித்து அவர் மீது சந்தேக பட்டு அவரை தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த பாஜக நிர்வாகியை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.

படுகாயமடைந்த சதீஷ்குமாரை பொது மக்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேர் அதில் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் மூன்று நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

இது போன்ற கொடூர சம்பவங்கள் வட மாநிலங்களில் தான் நடந்துள்ளது அது போன்று புதுச்சேரியில் முதல் முறையாக இளைஞரை பாஜக நிர்வாகி உள்ளிட்ட கும்பல் உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்வறக்கம்யின்றி கொடூர செயலை செய்த ராஜ மவுரியா மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்து அவர் வகிக்கும் வணிக பிரிவு மாநில அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

எனவே : புதுச்சேரியில் மக்களுக்கான நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு முதல்வர் ரெங்கசாமி அவர்களின் ஆட்சிக்கு இச்சம்பவம் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது . ஆகயினால் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த அனைவரும் மீதும் எந்த வித பாரம் பட்சம் பாராமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed