இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இளமனூர் அருகே மின் வாகன அறிமுக விழா மாதவனூர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கைனாடிக் நிறுவனத்தின் புதிய வகை பயணிகள் ஆட்டோ சுமை ஆட்டோ அறிமுக விழா நடைபெற்றது. இந்த வாகனத்தில் 400,450,500 கிலோ சுமையேற்ற கூடிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன இந்த வாகனங்களுக்கு அரசு மானியம் தரப்படுகிறது. இதன் விலை ரூபாய் 2,30, 000 முதல் 4,10,000 வரை ( மானியம் இல்லாமல்) மானியமாக ரூபாய் 40,0000 முதல் 80,000 வரை கிடைக்கும். மானியம் மானியத்துடன் இந்த வாகனங்கள் ரூபாய் 1,90,000 முதல்3,25,000 வரை கிடைக்கிறது.

வாகனங்கள் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்து கொடுக்கப்படும். மேலும் லித்தியம் அயன் பேட்டரி இயங்குவதால் 0 பிரசன்ட் செலவில்லாதது மேலும் பராமரிப்பு செலவு 0 பிரசன்ட் ஆகும். ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கிலோமீட்டர் இயங்க கூடியது. இந்த வகையில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 40 பைசா செலவாகும். இந்த வாகனத்திற்கு ரிஜிஸ்ட்ரேஷன் அங்கீகாரம் அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பதனை கைனடிக் மேலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ‌கிருஷ்ணா இண்டர் நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன் வழக்கறிஞர் ரவிச்சந்திரராமவன்னி பள்ளி செயலாளர் ஜீவலதா பள்ளி முதல்வர் முத்துக்குமார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *