இராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மது கடை ஒன்று உள்ளது.இந்த கடையின் ஒரு பக்கம் காவலர் குடியிருப்பும் மற்றொரு பக்கம் ஆத்ம நகரும் உள்ளது மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இந்த மதுக்கடை உள்ளது.இந்த பகுதியில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது கடை திறக்கும் மற்றும் அடைக்கும் நேரங்களில் ஏற்படும் அதிக வாகன போக்குவரத்துகளால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.இதுவரை இந்த மதுக்கடையை அகற்ற கடந்த மூன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் மனு அளித்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் உசேன், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில்,மண்டபம் ஒன்றிய செயலாளர் பனைக்குளம் ராவுத்தர் கனி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *