முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஜனாப் ஹைதர் அலி  தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அன்வர் அலி  தலைமையில் த.மு.மு.க இராமநாதபுரம் நகருக்கு உட்பட்ட அனைத்து பொறுப்பாளர்கள் சேர்ந்து கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை செய்து வந்தார்கள்.

அதே போல் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் போது கடந்த 2 மாத ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள். நோயாளியின் உதவியாளர்கள், சாலை ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் முதியோர்கள், முடியாதவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்கள் அனைவருக்கும் தினந்தோறும் மூன்று வேளைக்கும் உணவு வழங்கியும் ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களுக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான அரிசி காய்கறி மளிகை தொகுப்புகளை வழங்கினார். 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56 உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் சமுதாய மக்களின் வழக்கப்படி அடக்கம் செய்தும் சமூக சேவையில் உயர்ந்த நிலையை அடைந்த அன்வர் அலி  இணைந்து பணியாற்றிய சுல்தான் மாவட்ட செயற் குழு உறுப்பினர், ஜஹாங்கீர் அலி மாவட்ட துணைச்செயலாளர்,  இஸ்ஹாக் மாணவரணி செயலாளர், பரக்கத்துல்லா நகர் தலைவர், புரோஸ்கான் நகர் செயலாளர், ராஜா முகம்மது நகர் பொருளாளர், பிஸ்மில்லாகான் முன்னால் நகர் பொரருளாளர்,மன்சூர் அலி நகர் துணைத் தலைவர்,அன்வர் ராஜா நகர் துணைச் செயலாளர்,ஆசிக் ரகுமான் நகர் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயலாளர், செய்யது இம்ரான் நகர் மாணவரணி செயலாளர் மற்றும் அபுல் எகியா கான்,ரம்ஜத்கான் துபாய்,சவுதி மண்டல பொறுப்பாளர்கள் மேலும் தமுமுக இராமநாதபுரம் நகருக்கு உட்பட்ட மாவட்ட,ஒன்றிய,நகர் மற்றும் வார்டு பொறுப்பாளர்களை இராமநாதபுரம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் கட்சியின் சார்பாக பாராட்டி அவர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள கொரோனா உபகரணங்கள் வழங்கப்பட்டது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *