தனியார் வங்கி நிறுவனங்கள் மக்களிடையே கட்டாய படுத்தி வசூலிப்பதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பாலன் தெருவை சேர்ந்த சித்ரா , மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார், இவர் தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனம் மூலம் குழு உறுப்பினர்களுக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார் .

கோரோனா ஊரடங்குனால் வேலை இல்லாத காரணத்தால் இக்குழு உறுப்பினர்கள் தவனை பணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும் சித்ராவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மகளிர் குழுவினரிடம் பணம் வசூலித்து தரும்படி கூறி மிரட்டல் விடுத்துள்ள தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனத்தின் ஊழியர்களின் அராஜக போக்கை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .

கோரோனா ஊரடங்கு உத்தரவுனால் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு வருமையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் போதிய வருமானம் இல்லாமல் அன்றாட குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் இந்த நிலையில் தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களிடம் கட்டாய படுத்தி பணம் வசூலிப்பதும் மிரட்டல் தோனியில் பேசுவதும் தொடர்ந்த வண்ணமாக உள்ளன.

தொழில் இல்லாமல் கஷ்ட பட்டு வரும் இந்த நிலையில் மக்களிடையே கட்டாய படுத்தி தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் பணம் வசூலிப்பதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளன. மேலும் தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் மக்களின் கஷ்டத்தை உணர்ந்து ஊரடங்கும் உத்தரவு முழுமையாக தள்ர்வுக்கு வரும் வரையில் பணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

எனவே : மக்களிடம் கட்டாய படுத்தி பணம் வசூல் செய்யும் தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு முழுயான தளர்வுக்கு வரும் வரையில் தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *